Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 17 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எமக்குள் உருவாகும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமய பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றைத் தீர்த்துக் கொள்ள வெளியிலிருந்து உதவி தேவையில்லை. எமது மனச்சாட்சியே போதுமானது என மட்டக்களப்பு சிறுவர் வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் சபைத் தலைவர் அடிகளார் போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறுவர் வண்ணத்துப் பூச்சிப் பூங்காவின் 19 ஆவது வருட சிறுவர் பங்குபற்றல் நிகழ்வு மட்டக்களப்பு பிள்ளையாரடியில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.
'பொதுப் பகுத்தறிவு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
வளர்ந்தவர்களாகிய நம்மில் பெரும்பாலானோர் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் மனச்சாட்சியை விட்டுத் தூரமாகி விடுவதால் நம்மைப் பிரச்சினைகள் சூழ்ந்து கொள்கின்றன.
ஆனால், சிறுவர்கள் அவ்வாறல்ல. அவர்கள் பகுத்தறிவையும் மனச்சாட்சியைம் பின்பற்றி நடப்பவர்கள். அதனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை மகிழ்ச்சியான உலகில் மிதக்கிறார்கள்.
இதிலிருந்து சிறுவர்கள் நமக்கு ஒரு பெரிய அறிவார்ந்த பாடத்தைதக் கற்றுத் தருகின்றார்கள். அதுதான் பகுத்தறிவு. சிறுவர்களின் எல்ல செய்பாடுகளிலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அநேக பாடங்கள் உண்டு.
எமது பகுத்தறிவின் மூலம் தனிப்பட்ட, குடும்ப, சமூக, நாட்டுப் பிரச்சினைகள் என்று எல்லா முரண்பாடுகளுக்கும் தீர்வைக் கண்டு விடலாம். அதைவிடுத்து, ஜனாதிபதியிடமோ, வெளிநாட்டாரிடமோ பிரச்சினைக்கான தீர்வை கேட்டு நாம் அலைய வேண்டியதில்லை என்றார்.
நாட்டில் ஏற்பட்ட யுத்த முரண்பாடுகள் காரணமாக சிறுவர்களுக்கு ஏற்பட்ட மன வடுக்களைக் குறைக்கும் நோக்கில், 1995 ஆம் ஆண்டு கனடாவிலுள்ள மக்மிலன் குணபப்டுத்தல் புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகளைத் தழுவி, மட்டக்களப்பில் சிறுவர் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா கனேடியப் பிரஜையான போல் ஹோகன், மட்டக்களப்பைச் சேர்ந்த அடிகளார் போல் சற்குணநாயகம் மற்றும் சமூக சேவையாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago