2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இசைக்கருவிகள், சீருடைகள் எரிப்பு: 04 மாணவர்கள் கைது

Princiya Dixci   / 2015 மே 18 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தின் இசைக்கருவிகள் மற்றும் அதற்கான சீருடைகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 4 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேண்ட் இசைக்கருவிகளும் அதற்கான சீருடைகளும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் நள்ளிரவில் எரிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக தொடர்ந்து புலனாய்வு விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸார், இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் 4 மாணவர்களைச் சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (16) கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை பொலிஸ் சிறுவர் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .