2025 மே 17, சனிக்கிழமை

தாக்குதலுக்கு த.ம.வி.பு. கண்டனம்

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து,  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பத்தக்குட்டி சுமன்  என்பவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்று  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'16.05.2015 இல் இடம்பெற்ற தாக்குதலில்  பலத்த காயங்களுக்கு உள்ளான  இவர்,  செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். குறிப்பாக, மணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது மாணவர்கள் மத்தியில் குரோதத்தை  அதிகரிக்கச் செய்துவிடுமோ என்று  அஞ்சத்தோன்றுகின்றது. இவ்வாறான நிலைமையை இனிமேலும் இடம்பெறாதவாறு தடுத்துநிறுத்துவதுடன்,  தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் பெரும்பான்மையின மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தவேண்டும்.

இனங்களுக்கான உணர்வுகளையும் ஏனைய  சமூகத்தையும் மதிக்கும் தன்மையை தெளிவுபடுத்த முன்வர வேண்டும்
பெருமளவான தமிழ் பேசும் மாணவர்கள் பயில்வது மட்டுமல்லாது, தமிழ்ப் பிரதேசத்தில்  அமைந்துள்ள எமது கிழக்கு பல்கலைகழகத்தில் தமிழ்மொழி மூலமான தேசியகீதத்துக்கான எதிர்ப்பு  சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாதாகும்.

மேலும், இத்தாக்குதல் சம்பவமானது தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்கமுடியும் என்று எதிர்பார்த்து வாக்களித்த தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .