2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கு பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை

Gavitha   / 2015 மே 18 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடைவிதித்ததையடுத்து ஏற்பாட்டாளர்கள் திரும்பிச் சென்றனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் திங்கட்கிழமை (18) காலை 10.30 மணிக்கு மேற்படி நினைவேந்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த இடத்தில் ஏற்பாட்டாளர்களும் ஆர்வக் குழுக்களும் (Stake Holders)  நினைவேந்தல் நடாத்தத் தயாரானபோது, ஸ்தலத்துக்கு  விரைந்த ஏறாவூர் பொலிஸார், தடை உத்தரவைக் காட்டி அந்த ஏற்பாட்டாளர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி ஏற்பாட்டாளர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .