2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கூழாவடிச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடிச்சேனையில் இன்று திங்கட்கிழமை (18) இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு, அவை  செயலிழக்கச்  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடிச்சேனையில் செங்கல் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் ஒன்றான  மண்ணை தொழிலாளர்கள் தோண்டிக்கொண்டிருந்தனர்.  இதன்போது,  துருப்பிடித்த நிலையில் இந்த கைக்குண்டுகளை கண்ட  அவர்கள் தமக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தாம்; சென்று   கைக்குண்டுகள்  மீட்கப்பட்டு அவை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .