2025 மே 17, சனிக்கிழமை

கமநல அமைப்புகள், மீன்பிடி அமைப்புகளுடனான ஒன்றுகூடல் நிகழ்வு

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு திருப்பழுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கமநல அமைப்புகள், மீன்பிடி அமைப்புகளுடனான ஒன்றுகூடல் நிகழ்வு, சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை(16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைப்புகள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதுடன், கிராமத்தின் ஏனைய வாழ்வாதாரம் அபிவிருத்தி சம்மந்தமான பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு திருப்பழுகாமம் மாவேற்குடாவில் சிதைவடைந்த நிலையிலுள்ள அரிசி ஆலையினை விவசாய அமைச்சர் பார்வையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .