2025 மே 17, சனிக்கிழமை

வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் உதவித் தொகை வழங்கிவைப்பு

Gavitha   / 2015 மே 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், தனது மாகாணத்தில் உள்ள வரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதேச செயலகம் தோரும் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விதவைகள், மாதாந்த பொதுசன உதவி பெறுவோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் திங்கட்கிழமை (18) மானிய அடிப்படையில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்அமீன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருன்மொழி, கோறளைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.அலியார் பிரதேச செயலக நிருவாக உத்தியோகஸ்தர் ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .