2025 மே 17, சனிக்கிழமை

'புதிய அரசாங்கத்துக்கு சிலவற்றை அமுலாக்கமுடியாத நிலை'

Suganthini Ratnam   / 2015 மே 19 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய அரசாங்கம் நல்ல ஆட்சியை ஏற்படுத்தினாலும் கூட,  அரசாங்கம் விரும்பும் அளவுக்கு சில விடயங்களை அமுலாக்கம் செய்யமுடியாத நிலைமை உள்ளதை தாங்கள் காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, விளாவட்டவானில் திங்கட்கிழமை (18) மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'புதிய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பலம் இல்லாத நிலை உள்ளது. பெரும்பான்மை அற்ற இந்த அரசாங்கத்தினால் எமது பிரச்சினையை தீர்க்கமுடியுமா என்ற கேள்வியுள்ளது. 65 வருடங்களாக  போராடி தங்களது  அபிலாஷைகளை தீர்க்கமுடியாத தமிழினம் இன்றுவரை போராடுகின்றது.

எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்புரிமையை அதிகரிப்பதன் மூலமே புதிய அரச தலைவருடன் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.  

'ஜனாதிபதியை தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படாமல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவதுடன்,  ஜனாதிபதிக்கும் தமிழர்களுக்கும் இடையிலுள்ள கூட்டுத்தன்மையையும்  இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளையும்  சிலர் மேற்கொண்டுவருகின்றது' என்று  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .