2025 மே 17, சனிக்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மே 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வறிய நிலையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (18) பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

வறிய மாணவர்களின் அவசியத்தேவை கருதி வழங்கப்பட்ட 12,500 ரூபாய்  பெறுமதியான துவிச்சக்கரவண்டிகளை ஆலையடிவேம்பு பிரதேச மாணவ, மாணவிகள் 20 பேர் பெற்றுக் கொண்டனர்.

இத்துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களுக்க வழங்க முன்வந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கு நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், துவிச்சக்கரவண்டிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் கரிசனையோடு செயற்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன், அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.அன்வர், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப், சமுக சேவைகள் உத்தியோகத்தர் பொன்.சுந்தரராஜன், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் கே.தட்சணாமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .