2025 மே 17, சனிக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி

Princiya Dixci   / 2015 மே 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம், திங்கட்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு பேரணியை நடத்தியது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியானது பல்கலைகழக பிள்ளையார் ஆலயத்திலிருந்து பல்கலைக்கழக வாயில் வரைக்கும் ஊர்வலமாக சென்றது.

இதன்போது, தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களம் என மூவின மாணவர்களும் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று அமைதிவழியில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வை நடத்தக்கூடாது என ஏற்கெனவே பொலீஸார் உத்தரவு பிறப்பித்திருந்தும் மாணவர்கள் அவற்றையெல்லாம் தாண்டி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .