Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 மே 20 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதம் பாட உத்தரவிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டிப்பதாக வடமாகாண அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு செவ்வாய்க்கிழமை (19) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு வந்தாறு மூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் செங்கலடி பிரதேச செயலகமும் அப்பிரதேச விஞ்ஞான ஆய்வு நிலையமும் (விதாதா வள நிலையம்) இணைந்து நடத்திய கண்காட்சி இறுதி நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் ஒலித்ததால் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் தாக்கப்பட்ட செய்தி அறிந்து வடமாகாண அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியம் மிகவும் கவலையடைகின்றது.
தமிழ் மொழி இலங்கையின் தேசிய அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதனால் தமிழ் நிகழ்வுகளுக்கு தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைப்பதில் தவறு எதுவுமில்லை.
நாட்டில் இன நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு ஏற்பட்டுள்ள நிகழ்வானது ஏற்றுக்கொள்ள முடியாததும் கவலையளிக்கும் விடயமாகவும் உள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான துன்பியல் நிகழ்வு ஏற்படாத வண்ணம் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய, காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago