Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 20 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
'இந்த நாட்டில் ஒற்றையாட்சியை மாற்றக்கூடிய அளவுக்கு மத்திய அரசாங்கத்தில் நல்ல சகுனங்கள் தற்போதுள்ளன. இந்த நிலையில், எம்முடன் சேர்ந்து சிந்திக்கக்கூடிய ஆதரவாளர்களை நாம் பாதுகாக்கவேண்டும்' இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பழுகாமம் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'எமது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே மாகாணசபை அதிகாரங்களை நாங்கள் பெற்றோம். தற்போது யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்படவேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மையினம், சகோதர இனத்துடன்; சேர்ந்து வாழவேண்டும் என்ற நிலையுள்ளது. இதை உணர்ந்து செயற்படவேண்டும். சண்டையிடுவதை விட, சமாதானத்துக்காக அதிகம் போராடவேண்டும்' என்றார்.
'தற்போது உறுதியில்லாத மத்திய அரசாங்கம் இருக்கின்றது. இவ்வாறிருக்கையில், நாமும் இந்த அரசாங்கத்துக்குள் இல்லாமல் அரசாங்கத்தின் வெளியில் பிரதான சபையினுள் இருக்கின்றோம். இதை வைத்து பல விடயங்களை நாம் செய்துள்ளோம்.
நூறு நாட்களுக்குள் எமக்கு என்ன நடந்துள்ளது என்று பலர் கூறுவார்கள். ஆனால், மாற்றமொன்று மக்களின் வாழ்வியல் ரீதியில் ஏற்பட்டுள்ளதாக உணரமுடிவது எமக்கு தெரிகின்றது. இந்த நிலையில், உறுதியான அரசாங்கம் வரும் பட்சத்தில் அதில் நாம் பங்குதாரர்களாக இருந்து செயற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் வரும்.
தற்போதுள்ள தேசிய அரசாங்கம் ஏற்பட்டால் மாத்திரமே எங்களுடைய இலக்கை நோக்கி செல்லமுடியும் என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எனவே, அடுத்த கட்டம் தொடர்பில் நாம் மிக கவனத்துடன் இருக்கவேண்டும். தற்போதைய மாற்றத்தின் பின் எமக்கு ஒரு உறுதிப்பாடு வந்திருக்கின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago