2025 மே 17, சனிக்கிழமை

'ஐக்கிய தேசியக் கட்சி எனக் கூறும் போலி அமைப்பாளர்களை நம்ப வேண்டாம்'

Princiya Dixci   / 2015 மே 20 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள்; எனக் கூறி சிலர் அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சசிதரன், புதன்கிழமை (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

'மட்டக்களப்பில் ஒருவரும் காத்தான்குடியில் இன்னுமொருவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் எனக் கூறி அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி வருகின்றனர். இந்த  போலி அமைப்பாளர்கள் விடயத்தில் அதிகாரிகளும் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

அத்துடன், 'இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமல் ரணில்  விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கும் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன்' என அவர் தெரிவித்தார்.

மேலும் 'இவ்வாறு யாரும் பொதுமக்களிடம் வந்தால் ஐக்கிய தேசியக் கட்சியினால் வழங்கப்பட்ட அமைப்பாளர் நியமனக் கடிதத்தை காட்டுமாறு கூறுங்கள் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் என்ற அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணத்தை காட்டுமாறு கூறுங்கள். இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரமுகர்களை சந்தித்து விளக்கிக் கூறியுள்ளேன். இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .