2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனையில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு மின் இணைப்பு

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் கிராமிய மின்வழங்கல் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் விசேட நிதி ஒதுக்கீட்டில் சுமார் 3 மில்லியன் ரூபாய் நிதியில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளில் மின் இணைப்பு வழங்குவதற்கு மின்கம்பம் நடும் வேலைத்திட்டம்  வியாழக்கிழமை (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராமிய மின் விநியோக திட்டத்தின் கீழ் தைக்காநகர், றஹுமானியாபாத், பாலமுனை, உதுமாபுரம் ஆகிய பிரதேசங்களில் மின்கம்பம் நடப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக மின்சாரமின்றி காணப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ள முன்னாள் அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிரதேச பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .