2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஊர் வீதியை செப்பனிடுவதற்கான பணிகள் முன்னெடுப்பு

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சேதமடைந்துள்ள காத்தான்குடி மில்லத் பாடசாலை சந்தியிலுள்ள ஊர் வீதியை செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று வெள்ளிக்கிழமை (22) நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி மில்லத் பாடசாலை சந்தியில் உள்ள ஊர் வீதி மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
மழைகாலங்களில் இவ்வீதியால் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும்  இவ் வீதியின் சேதமடைந்த பகுதியை தற்காலிகமாக சீர் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் சிப்லி பாறுக் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக கலவை கற்கள் இடப்பட்டு இந்தப்பகுதி நேர்த்தியக்கப்படுகின்றது.

மிக விரைவில் இப்பாதை பூரணமாக செப்பநிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அதுவரை மக்களுடைய இலகுவான பிரயாணத்துக்காக தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X