Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 23 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாவட்டப் பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதால் விரும்பியவர்கள் விவரங்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் கற்பிக்கும் ஏராளமான ஆசிரியர்கள் தங்களின் பயணம் மற்றும் குடும்பக் கஷ்டங்களை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மேற்குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கடமையாற்றும் மற்றும் தங்களையும் தங்கள் மாகாணத்திலேயே நியமியுங்கள் என்று கூறுவோர் தங்களது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலை போன்ற விவரங்களை east.complaine@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago