2025 மே 17, சனிக்கிழமை

எமது கட்சியை குழப்ப சிலர் ஊடுருவியுள்ளனர்:அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எஸ.சபேசன், வடிவேல் சக்திவேல்

நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  மக்களின் செல்வாக்குடனான பலம் வாய்ந்த தமது கட்சியை குழப்புவதற்காக தங்களுக்குள் சிலர் ஊடுருவியுள்ளார்கள். இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்கள்பப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சோழ இளவரசி சீர்பாத தேவியின் சிலை திரைநீக்க விழா, மட்டக்களப்பு, துறைநீலாவணைக் கிராமத்தில் திங்கட்கிழமை  (25) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒதுக்குவதற்கு பலர் பல சூழ்ச்சிகளை செய்துவருகின்றார்கள்' என்றார்.
எமது இனம் கடந்த 65 வருடகாலமாக விட்ட தியாகங்கள், போராட்டங்களின் பலனாக கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை  போன்று, எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலிலும் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எமது மக்கள் அதிகரிக்கச் செய்து பேரம் பேசுகின்ற சக்தியாக மாறி வட, கிழக்கு இணைந்த தாயகத்தில் நிரந்த அரசியல் தீர்வைப் பெறவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .