2025 மே 17, சனிக்கிழமை

பற்றுச்சீட்டுக்கள் வழங்கும் நடைமுறை

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பொதுமக்கள் கையளிக்கும் சகல மனுக்களுக்கும் சகல அரசாங்கத்  திணைக்களங்களினாலும்  பற்றுசீட்டுக்கள்; வழங்கும் நடைமுறை  எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து  அமுல்படுத்தப்படவுள்ளது என்று   வீடமைப்பு மற்றும் சமூர்த்தி  பிரதியமைச்சர் எம்.எஸ்;.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கடந்த 07ஆம் திகதி  நடைபெற்ற  மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நடைமுறை அமுலுக்கு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்த மாவட்டத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம்; பொதுமக்கள் கையளிக்கும் சகல முறைப்பாட்டு மனுக்களும்  குறித்த அதிகாரியால் பெற்றுக்கொள்ளப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுக்கள்  வழங்கப்படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பற்றுச்சீட்டில் மனு பெற்றுக்கொண்ட திகதி, உத்தியோகஸ்தரின் கையெழுத்து, மனுவுக்காக வழங்கப்பட்ட தீர்வு அல்லது தீர்வு வழங்கப்படும் கால எல்லை என்பன குறிப்பிட்டு அத்திணைக்களத்தின் முத்திரை பொறிக்கப்பட்டு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படும்.

இந்த நடைமுறையை இந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்றபோது  பொதுமக்களுக்கு அரச அதிகாரிகள்,  திணைக்களங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், அரசாங்க  அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லிணப்பையும்   ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .