2025 மே 17, சனிக்கிழமை

வரட்சிக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்த 2013ஆம்  ஆண்டில்  வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  2014ஆம் ஆண்டு நட்டஈடு வழங்கப்பட்டபோது, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு  நட்டஈடு வழங்கப்படவில்லை என்று  விவசாயிகள்  தெரிவித்தனர்.

அத்துடன், விவசாயிகளின் நலனில் யாரும் அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மட்டக்களப்பு மாவட்ட  கமநலசேவைப் பிரிவுகளில் ஒரு சில வயல் கண்டங்களைக் கொண்ட  விவசாயிகளுக்கு மாத்திரமே   நட்டஈட்டுக்கான  காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையோருக்கு இன்னும் நட்டஈடு வழங்கப்படவில்லை.

இது தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டபோது, '2013ஆம்  ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டட விவசாயிகளுக்கு 2014ஆம்  ஆண்டு டிசம்பர் மாதம்  31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பெற்று நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்தோம். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முதலில் கிடைத்த விண்ணப்பங்களுக்கு அமைய  நட்டஈட்டு காசோலை வழங்கப்பட்டது.  பின்னர் அரசியலில் மாற்றம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றன. இதன் பின்னர் ஒதுக்கப்பட்ட நிதி போதாமையால்  இன்னும் 100 மில்லியன் ரூபாய் நிதி நட்டஈட்டுக்கு தேவையாக உள்ளது.  இதை கேட்டு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். வந்தவுடன் முதல் வேலையாக விவசாயிகளின் நட்டஈடு வழங்கப்படும' எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .