2025 மே 17, சனிக்கிழமை

'அசம்பாவிதங்கள் நல்லாட்சியை குழப்புகின்றன'

Kogilavani   / 2015 மே 27 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

'வித்தியாவின் படுகொலை, மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பன மக்களை மீண்டும் அச்சத்துக்குள்ளும் பீதிக்குளம் தள்ளும் நிலையை தோற்றுவித்துள்ளது. கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்பு நல்லாட்சி நிலவி வரும் நிலையில் இத்தகைய சம்பவங்களானது நல்லாட்சியை குழப்பும் விதத்தில் அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்டூரைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான 43 வயதுடைய சத்தியானந்தன் மதிதயன் என்பவர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிசூட்டில் செவ்வாய்க்கிழமை(26) பலியானார். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிதுள்ள அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நல்லாட்சியைக் குழப்புவதற்கென சில தீயசக்திகள் உருவெடுத்துள்ளார்கள். வடக்கிலே வித்தியாவின் படுகொலை நடைபெற்று இரண்டு வாரகாலம் முடிவதற்குள் மட்டக்களப்பில் இத்துப்பாக்கிச் சூட்டுச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது' என்றார்.

இவ்வாறான சம்பவங்கள் மக்களை பழையபடி அச்சத்துக்குள்ளும் பீதிக்குள்ளும் ஆழ்த்துவதாக அமைந்துள்ளது. இந்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

இந்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நல்லாட்சிக்கு அவமானம் விளைவிக்கின்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரிகளைக் பொலிஸார், துப்பறிந்து கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொள்கின்றவர்கள் யார் என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அனைவரினதும் கடமை என்பதோடு நாட்டின் அரசாங்கமே இதற்கு வகைகூற வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .