2025 மே 17, சனிக்கிழமை

குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சிபட்டறை

George   / 2015 மே 27 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

இலங்கையில் நிலவும், தகுதி பெற்ற குழாய் பொருத்துனர் பற்றாக்குறை கருத்திற் கொண்டு நிலையானதொரு நீர் வழங்கல் முறைமையை  உருவாக்குவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நாடுபூராகவூம் குழாய் பொருத்துனர்களுக்கான பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டு அவர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒர்  அங்கமாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட என்.வி.கியு. தராதாரமுள்ள குழாய் பொருத்துனர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறை, துறைசார்ந்த வளவாளர்களை கொண்டு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள   கிறீன் காடன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மடடக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.வினோதன் கலந்து கொண்டு பயிற்சி நெறியின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கினார்.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 28 என்.வி.கியூ. (NVQ) தராதாரமுள்ள குழாய்பொருத்துனர்கள் இப்பயிற்சி  நெறியில் கலந்து கொண்டனர். இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு எழுத்து மூலமான பரீட்சை நடைபெற்றதுடன் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில்  செய்முறை பயிற்சியும் இடம்பெற்றது.

இதுபோன்ற தொடர் பயிற்சிகள் எதிர்காலத்திலும் இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மடடக்களப்பு மாவட்ட காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .