Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 27 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை(26) முதல் காணவில்லை என வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி 2 வட்டாரத்தை சேர்ந்த சஹாப்தீன் நாசர், இஸ்மாலெப்பை ஆதம்பாவா ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேற்படி இருவரும் படகின் இயந்திரத்தை கொள்முதல் செய்வதற்காக பணத்துடன் திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.
இவர்களது கையடக்க தொலைபேசிகள் நேற்று மதியம்வரை செயலில் இருந்தபோதும் மதியத்துக்கு பின்னர் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் TVS EP AAS- 7539 என்ற இலக்கத்தகடுடைய, நீள நிற முச்சக்கரவண்டியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயல் செயலாளர் எம்.எம்.அமீரினது கையடக்கத் தொலைபேசி இலக்கமான 0778700005, 0773574075 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 hours ago
16 May 2025