2025 மே 17, சனிக்கிழமை

புலம்பெயர் உறவுகள் வழங்கும் உதவிகளை சரியாக பயன்படுத்த வேண்டும்

Sudharshini   / 2015 மே 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

புலம்பெயர் மக்கள் உறவுகளுக்கு உதவுவதுக்கு என அனுப்பிவைக்கும் பணத்தை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொக்குவில் கதிரவன் மீன்பிடி சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் மிகவும் வறிய குடும்பத்தை சேர்;ந்தவர்களுக்கு  தோணிகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு பிள்ளையாரடி நன்னீர் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

பிரித்தானியாவில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு நிறுவனமானது அதன் தாயக அமைப்பான இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினூடாக வழங்கிய நிதியுதவியின் கீழ், குறித்த பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் ஐந்து பேருக்கு மீன்பிடி வள்ளங்களும்; 16 பேருக்கு மீன்பிடி வலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இலண்டனிலுள்ள புலம்பெயர் மக்கள் ஒன்றிணைந்து இந்த நம்பிக்கை ஒளி என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வடகிழக்கு பகுதிகளில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் நம்பிக்கை ஒளியின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது பல உதவிகளை அவர்கள் வழங்கியுள்ளனர். படுவான்கரை பிரதேசத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதன்மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 30வருடகால யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்றவர்கள் அங்கு தங்களது வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் தங்கள் குடும்பங்களை மட்டும் வாழவைக்க வேண்டும் என்று நினைக்காமல், பல்வேறுபட்ட அமைப்பகள் ஊடாக பாதிக்கப்பட்ட வடகிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

நான் மட்டக்களப்பினை சேர்ந்தவனாக இருந்தாலும் ஒன்றைக்கூற வேண்டிய கடமையுள்ளது. புலம்பெயர்ந்த உறவுகளில் அதிகமானவர்கள் வடமாகாணத்தினை சேர்ந்தவர்கள். இந்த நம்பிகை ஒளி மூலமாக கிழக்கு மாகாணத்துக்கு உதவி வருகின்றனர்.

கடந்த காலத்தின் அரசாங்கத்தினால் நாங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டபோது எமக்காக இங்கு வந்து உதவிகள் உரிய முறையில் எமது மக்களுக்கு சென்றடையவிலலை. அந்த வேளையில் எங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் புலம்பெயர் மக்களாகும்.

இந்த உதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். சிலர் வழங்கப்படும் உதவிகளை பயன்படுத்தாமல் வேறு ஒருவருக்கு விற்கும் நிலையுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .