Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் எ.சி.எ.அஸீஸ் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா, வளவாளராக சட்டத்தரணி கே.கபிலன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது, மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு பகுதிகளில் பல செயலமர்வுகளை நடத்தி வருகின்றது
இதன்கீழ், மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்காக ஆற்ற வேண்டிய கடமைகள் உரிமைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் பல்வேறு மட்டங்களின் பகிரங்க உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மனித உரிமைகளை மேன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிவில் மக்களுக்கான உரிமைகளை எந்த அளவுக்கு வினைத்திறன் மிக்கதாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகத்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 hours ago
16 May 2025