2025 மே 16, வெள்ளிக்கிழமை

சமூக சேவை உத்தியோகஸ்தர் சுடப்பட்டமைக்கு கண்டனம்

Menaka Mookandi   / 2015 மே 28 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் உத்தியோகத்தராக கடமையாற்றும் சச்சிதானந்தன் மதிதயன் கடந்த 26ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஆகியவை கண்டனம் வெளியிட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணசபை இயங்கிய போது எம்முடன் இணைந்து பல வேலைத் திட்டங்களில் ஈடுபட்ட துடிப்பான இளைஞர். போர்க்காலத்திலும் போருக்கு பிந்திய காலத்திலும் நிறைந்த சமூக சேவைகளை நலிவுற்ற மக்களுக்காக ஆற்றிய ஒருவர்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தவரின் இழப்பில் நாமும் பங்கெடுக்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் தனது குடும்பத்தவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (26) உரையாடிக்கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .