Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 31 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க மாகாணக் கல்வி அமைச்சு நடமாடும் சேவைகளை நடாத்த வேண்டும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் இன்று (31) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கணடவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆசிரியர்களின் இடமாற்றங்களில் ஏற்படுகின்ற பிரச்சனைகளைத் ஒரு ஒழுங்குமுறையில் மேற்கொள்வதற்காகவே கல்வியமைச்சினால் தேசிய இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட்டது.
அதன்படி அதி கஷ்டப் பிரதேச பாடசாலையாக இருந்தால், 03 வருடங்களும் கஷ்டப் பிரதேச பாடசாலையாக இருந்தால் 04 வருடங்களும், விருப்பமான பாடசாலையாக இருந்தால் 06 வருடங்களும் விருப்பமற்ற பாடசாலையாகவிருந்தால் 08 வருடங்களும் சேவையாற்றியிருப்பின் அவ்வாசிரியர் இடமாற்றம் கோரி விண்ணப்பிப்பதுக்குத் தகுதியுடையவராவார்.
இடமாற்ற விண்ணப்பங்கள் அனுப்பப்படும்போது, வலயத்திற்குட்பட்ட இட மாற்றங்களாயின் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்களாயின் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் அனுப்பப்படுதல் வேண்டும்.
தகுதியுடைய எந்தவொரு விண்ணப்பப் படிவத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் அதிபருக்கோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ இல்லை. மாறாக வலய மட்டத்திலான, மாகாண மட்டத்திலான இடமாற்ற சபைகளே அதனைத் தீர்மானிக்கும்.
பெரும்பாலான வலயங்களில் தேசிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாகத் தங்களின் விருப்பு வெறுப்புக்களைக் கவனத்திற்கொண்டு ஆசிரியர்களை விடுவித்தல், விடுவிக்காமல் பழிவாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளனர்.
ஆனால், அதனைத் தடுக்கும் அதிகாரம் இடமாற்றச் சபைக்கு இருந்த போதும் விண்ணப்பதாரியின் சேவையைக் கவனத்திற்கொள்ளாது வலயக் கல்விப் பணிப்பாளரின் விடுவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இடமாற்றத்தைச் சிபாரிசு செய்கின்றது.
இத்தகைய நடவடிக்கை தேசிய இடமாற்றக் கொள்கையையும் இடமாற்றச் சபையையும் மீறும் செயலாகும்.
மூதூர், கல்குடா, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தொடர்ச்சியாக, 10 வருடங்களுக்கு மேற்பட்ட கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளில் சேவையாற்றும் பல ஆசிரியர்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.
இவை இடமாற்ற சபையில் ஆராயப்படுவதில்லை. மாறாக அதிகாரிகளின் தேவையை நிறைவேற்றும் சபையாக இடமாற்ற சபை இன்று விளங்குகின்றது.
மேலும், தகுதியான ஒரு ஆசிரியர் இடமாற்றம் கோரி வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் சென்றால், அதிபரிடம் விடுவிப்பு கடிதம் எடுத்து வாருங்கள் எனக் கூறுகின்றனர்.
மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் சென்றால், வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விடுவிப்பு பெற்று வருமாறு கோருகின்றனர்.
பதிலீடு வழங்குவது ஆசிரியர்களா? அல்லது அதிகாரிகளா? உண்மையில் பதிலீடு வழங்கவேண்டியவர்கள் அதிகாரிகளே. ஆனால், ஆசிரியர்கள் யாரிடம் சென்று பதிலீடு கேட்பார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த 14.05.2015 அன்று மட்டக்களப்பில் முதலமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற நடமாடும் சேவை மூலம் துன்பங்களை அனுபவித்த பல ஆசிரியர்களுக்கு விமோசனம் கிடைத்தமை வரவேற்கத்தக்கது.
ஒருவரையொருவர் சாடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் ஒரே மேசையில் அமர்ந்திருந்து ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஆராய்கின்ற போது தீர்வு கிடைக்க வழி பிறக்கின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகளை நடாத்தி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரசினைகளுக்கு, அதே இடத்தில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
05 Jul 2025