Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 31 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கொடிய யுத்தத்தின் விளைவாக இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று எல்லா சமூகத்தவரும் பாதிக்கப்பட்டதாக ஏறாவூர் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட் தெரிவித்தார்.
ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற 'வடபுலத்து முஸ்லிம்களின் தடையற்ற மீள்குடியேற்றத்துக்கான ஆதரவுக்குரல் வில்பத்து விவகாரம் ஆயிரம் அம்புகள்' எனும் தொனிப்பொருளிலான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடபுலத்திலே வாழ்ந்த அதிகமான தமிழ் மக்கள் அச்சம் காரணமாக தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைப் புறங்களிலே வாழ்ந்த பெரும்பான்மையின மக்களும் அவ்வாறே வெளியேறினார்கள்.
ஆனால், வடக்கு, கிழக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் சுயமாக வெளியேறவில்லை. அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ இனரால் வெளியேற்றப்பட்டு இப்பொழுது கால் நூற்றாண்டு கடந்தும் அவர்கள் இன்னமும் அகதிகளாகவே அலைக்கழிகின்றார்கள்' என்றார்.
'மன்னாரிலே முசலி மறிச்சுக்கட்டி, பண்டாரவெளி, கரடிக்குழி, பாலைக்குழி, சிலாவத்துறை போன்ற பிரதேசங்களிலே வாழ்ந்த முஸ்லிம்களுக்கு நூற்றாண்டு கால பூர்வீகம் இருக்கின்றது.
வடபகுதியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களுக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கக் காலத்திலே அவர்களுக்காக நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், பொது பல சேனா இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், கடந்த அரசு முஸ்லிம் அகதிகளுக்காக காணிகளை ஒதுக்கிக் கொடுத்தது.
இப்பொழுது நல்லாட்சி எனும் புதிய அரசு உருவாகியது முதற்கொண்டு அந்த மக்கள் தமது மீள்குடியமர்வு விசயங்களிலே கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்' எனவும் அவர் கூறினார்.
'இந்தப் புதிய நல்லாட்சி அரசாங்கமும் முஸ்லிம்களின் விடயத்திலே அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. புறக் கண் கொண்டு பார்க்கப்படுவதாகவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உணருகின்றார்கள். புதிய நல்லாட்சியின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான ஒரு தலைப்பட்சமான போக்கு கண்டிக்கத் தக்கது' எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர்க் கிளை கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் பாபா உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago