2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் உக்காத திண்மக்கழிவு அகற்றப்படாது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைப் பிரிவில் மறு அறிவித்தல்வரை உக்காத  திண்மக்கழிவுகள் அகற்றப்படாது  என்று நகரசபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (02)  அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் கொட்டப்பட்டுவந்த காத்தான்குடி நகரசபைப் பிரிவில்  சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகள்,  நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மே  28ஆம் திகதியிலிருந்து  நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அத்துடன், பொதுமக்களின் நிதியுதவியுடன் புதிய காத்தான்குடியில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் உக்கும் திண்மக்கழிவுகள் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில், உக்கும் கழிவுகள் மாத்திரமே நகரசபையால் அகற்றப்படும்.  

கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்கவேண்டும். இதை  மீறுபவர்களுக்கும் வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .