Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 04 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நஞ்சு கலக்காத இயற்கை உலகமாக இந்தப் பூமியை எதிர்கால சந்ததிக்கு கையளிக்கவேண்டும் என்று மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன் தெரிவித்தார்.
'இயற்கை விவசாயத்தில் இணைவோம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம், நேற்று புதன்கிழமை மாலை உறுகாமம், கித்துள் சந்தி பொதுச்சந்தை முன்றலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உலகம், காற்று, மண், நீர் இவை யாவற்றையும்; மனித செயற்பாடுகளால் அதன் இயற்கைத் தன்மையிலிருந்து மாற்றியமைத்து மாசுபட வைத்திருக்கின்றோம். நஞ்சூட்டப்பட்ட இயற்கையிலிருந்து உணவுகளை உற்பத்திசெய்து உட்கொண்டு வாழும் நாம், தேகாரோக்கியமானவர்களாக இல்லை. எம்மில் பெரும்பாலானவர்கள் நடமாடும் நோயாளிகளாக இருக்கின்றனர்' என்றார்.
'சமகாலத்தில் தொற்றாநோய்கள் அதிகரித்துள்ளமைக்கு எமது சூழலும் நாம் நுகரும் விவசாய உற்பத்திகளும் நஞ்சூட்டப்பட்டிருப்பதே காரணமாகும். விவசாயச் செய்கையில் மிதமிஞ்சிய அளவுக்கு இரசாயனங்களை பாவிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது. இந்த நிலையிலிருந்து நாம் படிப்படியாக விடுபட்டு, உலகையும் எதிர்கால சந்ததியையும் பாதுகாப்பதற்கு சபதம் எடுக்கவேண்டும்' எனவும் அவர் கூறினர்.
மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸன், உதவிப் பணிப்பாளர் கே.ராஜாம்பிகை, விதை உற்பத்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, பிரதேச விவசாயப் போதனாசிரியர்களான ஏ.டபிள்யூ.எம்.சிபான், வி.இளமாறன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பத்மநாதன், உட்பட அதிகாரிகளும் விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
1 hours ago
3 hours ago