Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 04 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஆசிரியர் பயிற்சிகளை முடித்துள்ள நிலையில் கிழக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் அவரவர்களின் மாவட்டத்துக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
நாளை வெள்ளிக்கிழமை (05) இந்த மீள் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள், கல்வி நடவடிக்கைகள், ஆளணிப் பற்றாக்குறை, பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர் ஒஸ்ரின் பெரல்னாண்டோவுடன் நேற்று புதன்கிழமை (03) ஆராய்ந்தார்.
இதன்போது ஆளுநரால் முதலமைச்சரின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்களுக்கு அவரவர்கள் வதியும் மாவட்டத்திலே நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நாளை வெள்ளிக்கிழமை (05) மாலை 2.30 மணிக்கு மட்டக்களப்பு மஹஜன கல்லூரியிலும் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களுக்கு நாளை மறுதினம் சனிக்கிழமை (06) காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிமனையிலும் வைத்து நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
இந்த நியமன நிகழ்வுகளின் போது கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி ஆகியோருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025