2025 மே 16, வெள்ளிக்கிழமை

புகையிலைப் பொருட்களை விற்ற வர்த்தகர்களுக்கு தண்டம்

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக  புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை(05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால்  தலா 2500 ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.

தேசிய புகையிலை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவ்வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் என்.சோதிநாதனின் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வயதுகுறைந்தவர்களுக்கு விற்பனைசெய்தல்,பொது இடத்தில் பாவனைக்கு வழங்கியமை உட்பட பல்வேறு சட்டத்துக்கு முரணாண வகையில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டதாக பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தபோது 20பேருக்கும் தலா 2500 ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய புகையிலை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தொடர்ச்சியான சோதனைப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .