2025 மே 16, வெள்ளிக்கிழமை

பொதுமக்களின் பங்களிப்புடன் பாதை திருத்துதல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

பொதுமக்களின்  பங்களிப்புடன் பாதை திருத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை  கிராமத்தில் சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை, ஒக்ஸ்பாம், நிறுவனத்தின் அனுசரணையுடன்; மேற்கொள்ளப்படும் காசுக்கான வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீதியை தாங்களே புனரமைப்பதற்கும்; நீர் வழிந்தோடும் வடிகான்களை வெட்டுவதற்கும் உரிய சந்தர்ப்பத்தை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகளும் பிரதேச சபை அதிகாரிகளும் இணைந்து காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளனர்.

இக்கிராமத்து மக்கள் மழைக்காலங்களில்; வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுள் முக்கியமானது போக்குவரத்து சீரழிந்து போவது. இவர்களுக்கான பிரதான போக்குவரத்து வீதி ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்குவதும் சேதமுறுவதும் வழக்கம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .