Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு பெற்றுத்தரவேண்டும். அவ்வாறில்லையாயின், சாலை மறியல் போராட்டங்களில் மக்கள் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்; சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர் 'திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினை காத்தான்குடியில் நீண்டகாலமாக இருந்துவருகின்றது. முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்த காலத்தில் காத்தான்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தி இந்தப் பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டது. திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக காணிகள் பெற்றுத்தரப்படுமென அப்போதைய முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்தார்.
இருந்தபோதிலும், அந்த உத்தரவாதங்கள் சரியான முறையில் பேணப்படாததன் காரணத்தினாலும் காத்தான்குடி மக்களில் சிலருக்கு சொந்தமான காணிகள் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளதால், இந்தக் காணிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு முற்பட்டபோது, சில முரண்பாடுகள் ஏற்பட்டதனாலும்; அதிலும் கொட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், காத்தான்குடி ஆற்றங்கரையோரத்தில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டு, அங்கு கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் அதன் எல்லையில் வாழ்கின்ற மக்கள் சுகாதாரப்பிரச்சினைகளை எதிர்நோக்கியதால், அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சிலர் சென்றனர். அந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அங்கு தற்போது குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் கடந்த கூட்டத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் காத்தான்குடி ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக பிரச்சினை எடுக்கப்பட்டது. இதன்போது, காத்தான்குடியில் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு இடத்தினை மாவட்ட அபிவிருத்திக்குழுவினால் பெற்றுத்தருமாறு நான் அந்தக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தேன்.
அந்த அடிப்படையில் எதிர்வரும் ஒன்;பதாம் மாதம் இதற்கான ஒரு தீர்வு எட்டப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனெப்ஸ் நிறுவன திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அந்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கான அந்த திட்டத்தில் காத்தான்குடியும் உள்வாங்கப்படும் எனவும் இதன் நிர்மாணப்பணிகள் முடிவடைந்தவுடன் இதற்கான தீர்வு கிடைத்து விடும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சினால் கூறப்பட்டது.
ஒன்பதாம்; மாதம் வரைக்கும் திண்மக்கழிவுகளை காத்தான்குடி ஆற்றங்கரையோரம் கொட்டுவதற்கு அனுமதியிருக்கின்றது என மேற்படி கூட்டத்தில் கூறப்பட்டபோதும் கூட, நீதிமன்றம் ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டக்கூடாது என தீர்ப்பு வழங்கியதையடுதது குப்பை கொட்டுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினையை எல்லா மட்டத்திலும் கொண்டு சென்றபோதும் இதற்கான ஒரு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்பது கவலையாகவுள்ளது.
சனிக்கிழமை (6.5.2015) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியபோது எதிர்வரும் புதன்கிழமைக்குள் இதற்கான ஒரு தீர்வை வழங்குவேன் என என்னிடம் கூறியுள்ளார்.
இந்தப்பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தல் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என காத்தான்குடி மக்கள் கூறுகின்றனர். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது, இந்த ஆட்சி மாற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும் இருக்கின்றது. அதனால்தான் முன்கூட்டியே இந்த விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டி ஏற்பட்டது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
2 hours ago
4 hours ago