Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 07 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த நாட்டின் பிரதமராக இருப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவே தகுதியானவர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வி.இராதாகிருஸ்ணனுக்கு நேற்று சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வேலை செய்பவர்கள் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது வழக்கமாகும். அதன்படியே ரணில் விக்கிரமசிங்க மீதும் எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை ஒழிப்பதற்கான திட்டமே அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ளமையாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக போட்டியிடும்போது, அடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே. அவரையே நான் பிரதமராக நியமிப்பேன் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ஆக்குவேன் என்று அவர் கூறியதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வட, கிழக்கு மற்றும் மலையக சிறுபான்மை மக்;களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்தார்கள்.
எதையும் பொறுமையுடன் தாங்கக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் யார் தூற்றினாலும், அவர் சிரித்துக்கொண்டே போவார். அதுவே அவருடைய பெருந்தன்மை.
அப்படியான ஒரு பிரதமரே எமது நாட்டுக்கு தேவையாகும். எதிர்காலத்திலும் அவரே பிரதமராக வேண்டும் என நான் கூற விரும்புகின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
1 hours ago
3 hours ago