2025 மே 16, வெள்ளிக்கிழமை

'அரசியலில் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பை பயன்படுத்தவேண்டிய காலகட்டம் இது'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 07 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுiஸைன்

தற்போதுள்ள அரசியல் நிலவரங்களை கருத்திற்;கொண்டு அரசியலில் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பை  பயன்படுத்தவேண்டிய காலகட்டம் இதுவென்று  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை விவசாயத்திட்டங்கள் தொடர்பில் திருகோணமலை மூதூர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தற்போதைய  அரசியல் நிலவரங்களை கருத்திற்கொண்டு எமது காரியத்தை  நுணுக்கமாகவும் சமயோசிதமாகவும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. கடந்த காலத்தை விட, தற்போது சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையை  நாம் ஏற்றுக்கொண்டு அடுத்த நகர்வை  நோக்கிச் செல்லவேண்டும்.

எதிர்க்கட்சியில் நாம்  இருந்துகொண்டு இடித்து இடித்து கூறிய  காலம் அது. ஆனால், தற்போது சமயம் பார்த்து புத்திசாதுரியமாக கூறவேண்டிய நிலையிலுள்ளோம். அப்போது எதிர்க்கட்சியில் இருந்தபோது, என்ன கூறினாலும்; அங்கு செல்லுபடியாகாது என்ற நிலையில் எமது மக்களின் நிலையுடன் புரிந்துகொண்டு நடந்தோம்.

தற்போது ஒரு மாற்றத்தின் மூலம் எமது உறவுகளின் நிலையை இன்னுமொரு பரிணாமத்துடன் கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் விடயங்களை மிக நுணுக்கமாக கையாண்டு கொண்டிருக்கின்றோம்.

எமது உரிமைப் பிரச்சினையை நாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை. அதனைத் தூக்கவேண்டிய நேரம் இருக்கின்றது. தற்போது அதற்காக கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பை  பயன்படுத்த வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .