2025 மே 16, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மயிலம்பாவெளி, விபுலானந்தபுர  வாசம் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  விபுலானந்த வாசிகசாலை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (06) இடம்பெற்றது.          

அமைப்பின்  தலைவர் வே.பிரபாகரன் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், 2014 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும்  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இக்கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன் செல்வராசா, பா .அரியநேந்திரன், கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம்;,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  இ.துரைரட்ணம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிராம பொது அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .