2025 மே 16, வெள்ளிக்கிழமை

யுவதியை காணவில்லை

Menaka Mookandi   / 2015 ஜூன் 07 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தைச்ட சேர்ந்த ஆறுமுகம் அரசிளம்குமாரி (வயது 34) என்ற பெண்ணை காணவில்லையென மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில், அவரது பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் இந்தப் பெண், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் நடந்த வினைதிறன் கான் பரீட்சைக்கு சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் விசாரித்துப் பார்த்ததில் அன்றைய தினம் பரீட்சைக்கும் அவர் செல்லவில்லை எனவும் பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .