2025 மே 16, வெள்ளிக்கிழமை

'கழிவுப் பொருட்களை கொண்டு பாவனை பொருட்கள் செய்துள்ளமை முன்மாதிரியானது'

Thipaan   / 2015 ஜூன் 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கழிவுப் பொருட்களை வீசாமல் அவற்றைக்கொண்டு அன்றாட பாவனைக்குரிய பொருட்கள் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஏனையவர்களுக்கு முன்மாதிரியானது என அரசடி மற்றும் கோட்டைமுனைக்கான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. அருளாந்தி தெரிவித்தார்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு கைவினைத்திறன் மூலம் செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் பொருட்கள் செய்யும் பயிற்சிப் பட்டறையும்  கோட்டைமுனை விஸ்வகர்ம கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (06) நடைபெற்றது.

கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சி அதன் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

அவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில்,

இந்த ஆண்டு சுற்றாடல் தினம் '7 பில்லியன் மக்களைக் கொண்ட இவ் உலகைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்போது நீங்கள் வீட்டில் தினமும் கிடைக்கும் கழிவுப் பொருட்களான பிளாஸ்டிக், சிரட்டை, காகிதம், துணி மற்றும் கண்ணாடி என்பவற்றினால் அணிகலன்கள், அழகுபடுத்தும் பொருட்கள், உடுதுணிகள் என்பனவற்றை செய்திருக்கிறீர்கள்.

அத்துடன், சிரட்டையில் உலகத்தின் அமைப்பு, பூ வாஸ் செய்திருப்பது மற்றும் துணிகளில் மட்டக்களப்பின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மீன்மகள், பண்டைய காதலர்கள் என்பவற்றை வரைந்து பற்றிக் பிறின்டிங் செய்திருப்பது என்பன படைப்பாளியின் உளத்திறனை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

இப்படியான பொருட்கள் மட்டக்களப்புக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளைக் கவரும்.
கடந்த வாரம் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு இப்படியான வேலை செய்வோரின் பொருட்களை காட்சிப்படுத்த தேடியபோது எமக்குக் கிடைக்கவில்லை.

இனிமேல் இப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை திவிநெகும திணைக்களத்தின் மூலம் பெற எனது முயற்சியை மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோட்டைமுனை கிராம சேவை உத்தியோகத்தர் பி. விமலசிறி, பொறியியலாளர் பி. லோகானந்தராஜா, ஓவியர் குலராஜ் மற்றும் கிழக்கு மாகாண விஸ்வகர்ம பொற்றொழிலாளர் சம்மேளன மாதர் அணியின் இணைப்பாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெண் தாதி ரஞ்சனி சத்தியானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .