2025 மே 16, வெள்ளிக்கிழமை

'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டி

Gavitha   / 2015 ஜூன் 15 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டியில், மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இவற்றில் 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவான வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் முதல் இடத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ்.சியாம்குமார் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாம் இடத்தை  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சி.எம்.அஸ்மீர் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ்.புவனசிங்கம் பெற்றுக்கொண்டார்.

இறுதி பரிசு வழங்கல் நிகழ்வு கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் கே.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .