Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 15 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுபான்மை சமூகங்களினால் கொண்டு வந்த இந்த நல்லாட்சி அரசாங்கம், சிறுபான்மை மக்களின் அரசியல் அதிகாரங்களை பறிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவா இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் 'நல்லாட்சி' என்ற அரசாங்கத்தை கொண்டு வந்தவர்கள்; வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தினர்களாவர். அந்த பங்களிப்பை செய்தவர்கள் நாங்கள். அவ்வாறான பங்களிப்பை செய்ததன் பின்னர் இந்த நல்லாட்சியிலே என்ன நடக்கின்றது? என்பது பற்றி நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.' என அவர் தெரிவித்தார்.
அத்துடன், '20ஆவது திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்பதில் எங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். நாங்கள் கொண்டு வந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களுடைய உரிமைகளை, எங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அல்லது அரசியல் அதிகாரத்தை பறிக்கின்ற ஒரு நல்லாட்சி அரசாங்கமாக இருப்பதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை;.' என அவர் தெரிவித்தார்.
மேலும், '20ஆவது திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் சேர்த்து அதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சரவையில் அங்கிகாரம் பெற்றுள்ள 20ஆவது திருத்தத்தை ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகமும் எதிர்க்க இருக்கின்றது.' என அவர் தெரிவித்தார்.
'சிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை நல்லாட்சியில் அமர்தியதோ அந்த சிறுபான்மை சமூகத்துக்கு அநீதி இழைக்கின்ற ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்ககூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். அரசியல் காய் நகர்த்தல்களில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.' என அவர் தெரிவித்தார்.
'இன்று எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் உதயன் கம்பன்வில ஆகியோர் இனவாதியாக காட்டி வருகின்றனர். இனவாதத்தை தூண்டுகின்றவர்களை நாம் அடையாளம் காட்டியாக வேண்டும். இவ்வாறான இனவாதம் ஏற்படுத்தப்படவதை நாம் அனுமதிக்க முடியாது. இந்த சூழ்நிலையில்தான் எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மிக அவதானமாக காய் நகர்த்தல்களை செய்து வருகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago