2025 மே 16, வெள்ளிக்கிழமை

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏறாவூர் பிரதேசம் அகதி முகாமாக மாறத் தொடங்கியது

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏறாவூர்; பிரதேசம் திறந்தவெளி அகதி முகாம் போல மாறத் தொடங்கி விட்டது. இங்குள்ள மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களான மட்டக்களப்பு, பதுளை வீதிப் பகுதியிலுள்ள பல கிராமங்களில் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற வாழ்வாதாரத் தொழில்களைச் செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தவர்கள் என ஏறாவூர் பள்ளி வாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

புனித றமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 550 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 4,500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (13)நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பயங்கரவாதம் இம்மக்களை துரத்தத் தொடங்கி விட்டது. அதனால் அவர்கள் அகதிகளானார்கள்.

இதேவேளை, முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பல கிராமங்கள் இன்றளவும் தூர்ந்து போய்க்கிடக்கின்றன.
முஸ்லிம்கள் மாத்திரம் முறைப்படி மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலை கிழக்கிலும் தொடர்கிறது. இந்த நல்லாட்சியிலும் இந்த நிலை தொடர்வது துரதிஷ்டமானது.
 

வறிய நிலையில் இன்னும் பலர் வாழவேண்டியுள்ளதால் நாம் பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது' என்றார்.

நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் ஏறாவூர் பள்ளி வாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், இலங்கை இஸ்லாமிய நிவாரண நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எம். இப்றாஹிம் சப்ரி, கண்காணிப்பு அதிகாரி என்.எம்.எல். இப்றாஹீம், திட்ட அதிகாரி வை.பி. ஹுஸைன், ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை இஸ்லாமிய நிவாரண நிறுவனத்தினால் (Islamic Relief SriLanka) இந்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .