2025 மே 16, வெள்ளிக்கிழமை

இருவேறு விபத்துக்களில் ஒருவர் மரணம்; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 16 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜமால்டீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்  திங்கட்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ள இருவேறு விபத்துக்களில் ஒருவர்  மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக சைக்கிளும் லொறியும் மோதியதால், பழைய பொலிஸ் நிலைய வீதியை சேர்ந்த பொன்னம்பலம் நடராஜா (வயது 65) மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன்,  லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளனதால், காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் சரிப்டீன் (வயது 54)  வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதும் நாவற்காடு பிரதேசத்தை சேர்ந்த முனியாண்டி கணேஸ் (வயது 60)  அக்கரைப்பற்றிலிருந்து வியாபாரத்துக்காக சம்மாந்துறைக்கு சைக்கிளில் சென்றபோதும் விபத்துக்குள்ளானார்கள்.

காயமடைந்த இருவரும் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பின்னர், பொலிஸ் சார்ஜன்ட் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .