2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள்

Princiya Dixci   / 2015 ஜூன் 16 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்டத்தில் சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக்குழுக்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக காத்தான்குடி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் சி.சத்தியநாதன், நேற்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

'காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில், 04 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் கிராமமட்டத்தில் சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக்குழுக்கள், இச்செயற்றிட்டத்தின் கீழ், இவ்வருடம் புனரமைக்கப்பட்டள்ளன' என அவர் தெரிவித்தார். 

அத்துடன், 'சிறுவர்களின் பிரச்சினைகள், தேவைகளை இனங்காணல், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சமூகத்துக்கு விழிப்பூட்டல் மற்றும் பிரதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறுவர் கழகங்களை கண்காணித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு கிராம மட்டத்தில் சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்படுள்ளன' என்றார்.

'இந்தக்குழுக்களில் கிராமசேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதி, தாதி மற்றும் அதிபர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை சேவைகள் திணைக்கத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம மட்டத்திலான சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக்குழுக்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .