2025 மே 16, வெள்ளிக்கிழமை

விவசாயப் பண்ணைக்கு விடிவு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக சுமார் 30 வருடங்களாக இயங்காமலிருந்த  கரடியனாறு விவசாயப் பண்ணையை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நேற்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

இந்த விவசாயப் பண்ணை மாதிரிப் பண்ணையாக இயங்கவுள்ளது. இதில் நல்லின ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்ப்பும் புல்லினங்கள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், மரக்கறிச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பண்ணையில் எதிர்காலத்தில் நல்லிண ஆடுகள், மாடுகளை சினைப்படுத்தல் மூலமாக இனப்பெருக்கம் செய்து, அவற்றை குறைந்த விலையில் கால்நடை பண்ணையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இதேவேளை, கடுக்காமுனையில் மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .