2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிகரம் கிராமத்தில் வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான  சாவிகளை  பயனாளிகளிடம் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தார்.

சிகரம் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் ஏ.எல்.அப்துல் ஜவாத்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

சவூதி அரேபிய தனவந்தரின் நிதியுதவியுடன் சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலும்; முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்  முயற்சியுடனும் சிகரம் கிராமத்தில் 60 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியானதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .