2025 மே 16, வெள்ளிக்கிழமை

'பாலமுனை பிரதேசம் அபிவிருத்தி அடைந்து வருகின்றது'

Gavitha   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பாலமுனை பிரதேசம் கடந்த கால போர் சூழலினாலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இந்த பிரதேசம் இன்று அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனைப் பிரதேசத்திலுள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு, முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மாபிள் கற்கள் (tiles) அன்பளிப்புச் செய்யப்பட்டன.

பள்ளிவாயலில் திங்கட்கிழமை (15) இரவு நடைபெற்ற வைபவத்தின் போதே, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 15 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இந்த மாபிள் கற்களை அன்பளிப்பு செய்தார்.

குறித்த பள்ளிவாயலின் அபிவிருத்தி பணிகளுக்காக உதவி செய்வதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த வைபவத்தில், மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.முபாறக் உட்பட பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .