2025 மே 16, வெள்ளிக்கிழமை

'பள்ளிவாசல் பிரச்சினையை உடன் தீர்க்க வேண்டும்'

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு நேற்று புதன்கிழமை (17) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, 

தம்புள்ளை பள்ளிவாசலை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அகற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையையொட்டிய வன்முறை சார்ந்த செயற்பாடுகளுக்கு அங்குள்ள முஸ்லிம்கள் முகங்கொடுத்து வந்துள்ளனர். இப்பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படைக் காரணமாக 'நகர அபிவிருத்தி' என்ற கோசம் முன்வைக்கப்பட்டது. 

எனினும், பள்ளிவாசலை பாதுகாக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கை சரியான முறையில் கணக்கில் எடுக்கப்படவில்லை. பள்ளிவாசலை இடமாற்றுவதற்காக வேறு ஒரு காணி தருவதாக வாக்களிக்கப்பட்டு அதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

இப் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினை தொடருமானால் முஸ்லிம் மக்களுக்கும் நமது கட்சிக்கும் அதன் தலைவரான உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பே இப்பள்ளிவாசலின் ஸ்திரத்தன்மையை இருந்த இடத்தில் உறுதிப்படுத்தியோ அல்லது தம்புள்ளை நகரச் சந்தை எல்லைக்குள்ளேயே அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித்துண்டை வழங்கியோ தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .