2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சம்சூதீன் நியமனம்

Princiya Dixci   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா, பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான 14ஆவது புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரி.பி. சம்சுதீன் பதவியேற்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பொலிஸ் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.

புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை nலுத்தப்பட்ட பின்பு பொலிஸ் உயர் அதிகாரிகளின் பதவி மற்றும் பெயர்களைக் கேட்டறியும் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜயசிங்க, மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற இவர் இதற்கு முன்பு நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .