2025 மே 16, வெள்ளிக்கிழமை

அரசாங்க முன்னிலை கள அலுவலர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் அரச முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான சமூக அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய பயிற்சிநெறி, சத்துருக்கொண்டான் சர்வோதய பிராந்திய பயிற்சி நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டதாக முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.

ஜைகா நிறுவனத்தின் அனுசரணையுடன்  ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிநெறி, தொடர்ந்து 4 நாட்களுக்கு இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

இப்பயிற்சிநெறி எதிர்வரும் ஜுலை மாதத்திலும் ஆறு தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

முன்னிலை கள உத்தியோகத்தர்களுக்கான சமூக அபிவிருத்தி தொடர்பான இப்பயிற்சிநெறியில் வாகரை, கிரான், வவுணதீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 60 வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வின்போது மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாவட்டச் உதவிச் செயலாளர் எஸ். ரங்கநாதன், ஜைகா திட்ட இணைப்பாளர் இமாஷாபோ ஈஷா, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .