2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தினம்

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தியாகிகள் தினம், மட்டக்களப்பிலுள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) அனுஸ்டிக்கப்பட்டது.

இவ் வைபவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் பொதுச் செயலாளருமான கே.பத்மநாபாவின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்,  மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப்பின்ஸ்தாபகரும் அதன் பொதுச் செயலாளருமான கே.பத்மநாபா உட்பட 13பேர் 19.6.1990 அன்று இந்தியாவின் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தே இந்த தியாகிகள் தினம் வருடாந்தம் ஜூன் மாதம் 19ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .